550 குழந்தைகள்… ஒரே தந்தை.? இனிமேல் அதனை செய்ய கூடாது என தடை விதித்த நீதிமன்றம்.!
550 குழந்தைகள் பிறப்புக்கு காரணமான ஒரு நபருக்கு விந்து தானம் அளிக்க நெதர்லாந்து நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நெதர்லாந்தை சேர்ந்த மெய்ஜர் எனும் 41 வயது நபருக்கு நெதர்லாந்து நீதிமன்றம் இனி விந்து தானம் செய்யவே கூடாது என தீர்ப்பளித்துள்ளது. அதாவது அந்த நபர் கடந்த 2007 முதல் விந்து தானம் செய்து வந்துள்ளார். இதுவரை 550 முதல் 600 குழந்தைகள் உருவாக காரணமாக இருப்பார் என கூறப்படுகிறது.
இது குறித்து ஓர் அறக்கட்டளை நிறுவனம் நெதர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றத்திற்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளது. நெதர்லாந்தில் ஒரு நபர் அதிகபட்சமாக 12 பெண்கள் அல்லது 25 குழந்தைகள் வரை மட்டுமே விந்து தானம் செய்ய அனுமதி உண்டு. அப்படி இருக்கையில் மெய்ஜர் சுமார் 550 குழந்தைகளுக்காக விந்து தானம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
11 நெதர்லாந்து மருத்துவமனைகள் உட்பட மொத்தம் 13 மருத்துவமனைகளுக்கு விந்து தானம் அளித்துள்ளார். இதனை கண்டறிந்த நெதர்லாந்து நீதிமன்றம் இனி 41 வயதான மெய்ஜர் விந்து தானம் செய்ய கூடாது எனவும் அப்படி மீறி விந்து தானம் செய்தால் 100,000 யூரோக்கள் ( இந்திய மதிப்பில் 90,41,657) அபராதம் விதிக்கப்படும் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.