தங்கள் பேரனுக்காக 1.8 லட்சத்தை இழந்த தம்பதி.! செயற்கை நுண்ணறிவால் நேர்ந்த சம்பவம்.!
கனடாவில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடந்த மோசடியில் இந்திய மதிப்பில் 18 லட்சத்தை ஒரு தம்பதியினர் இழந்துள்ளனர்.
நவீன தொழில்நுட்பம் எந்தளவுக்கு மனிதர்களுக்கு உதவிகரமாக இருக்கிறதோ. அதே போல அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது. அதுகுறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவ்வப்போது உலக நாடுகள் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. அந்த மாதிரியான சம்பவங்கள் தினசரி உலகில் அங்கங்கே நடைபெற்று தான் வருகிறது.
கனடா தம்பதி :
கனடாவை சேர்ந்த ரூத் கார்டு (வயது 73 ) மற்றும் அவரது கணவர் கிரெக் கிரேஸ் (வயது 75) எனும் தம்பதியினருக்கு அண்மையில் ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் அவர்களது பேரனை போல ஒரு குரல் பேசியுள்ளது. அதில் ஒருவர் குறுக்கிட்டு ஒரு பெரிய வழக்கில் உங்கள் பேரன் சிக்கியுள்ளார். அவரிடம் போன், பர்ஸ் ஆகியவை இல்லை. என கூறி ஜாமீன் வாங்க பணம் தேவை என கூறியுள்ளனர்.
18 லட்சம் :
தனது பேரன் சிக்கலில் மாட்டிக்கொண்டதாக நினைத்து தனது பேரனை காப்பாற்ற தங்கள் வங்கி கணக்கில் இருந்து இந்திய மதிப்பில் 18 லட்சத்தை எடுத்து அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். அவர்கள் மேலும் பணம் கேட்கவே, அடுத்த வங்கி கிழக்கு தம்பதி விரைந்துள்ளது.
வங்கி மேலாளர் விளக்கம் :
அப்போது அந்த இன்னொரு வங்கி கிளை மேலாளர் அவர்களை தடுத்தி நிறுத்தி, இதுபோன்ற ஒரு சம்பவம் ஏற்கனவே நடைபெற்றதாகவும், இது போலியான கால் எனவும் கூறியுள்ளார்.
AI தொழில்நுட்பம் :
பிறகு தம்பதியினருக்கு வந்த போன் காலில், அவர்களது பேரனை போல பேசியது AI எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி என்பது தெரிய வந்துள்ளது. அந்த AI வசதியை கொண்டு தான் ஒரு நபர் இவர்களிடம் இருந்து பணத்தை ஏமாற்றியுள்ளான் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வயதான தம்பதியினர் அதிகாரிகளிகளிடம் புகார் அளித்துள்ளனர்.