பூமியின் சுழற்சியில் ஏற்பட்ட மாற்றம்! மிகக் குறுகிய நாளாக பதிவு
ஜூலை 26, 2022 அன்று பூமி அதன் மிகக் குறுகிய நாளை பதிவு செய்தது.
IERS இன் தகவல்படி, ஜூலை 26 அன்று பூமி அதன் மிகக் குறுகிய நாளை பதிவு செய்ததாக நேற்று தெரிவித்தது. கடந்த மாதம் ஜூன் 29 அன்று 24 மணி நேர சுழற்சியை விட 1.59 மில்லி விநாடிகள் குறைவாக இருந்த நேரத்தில் பூமி தனது முழு சுழற்சியை நிறைவு செய்தது.
இதைத்தொடர்ந்து ஜூலை 26 அன்று நாள் 24 மணிநேரத்தை விட 1.50 மில்லி விநாடிகள் குறைவாக இருந்தது. தற்போது பூமியின் வேகம் பொதுவான வேகத்தை விட அதிகரித்து வருகிறது. இந்த விளைவுகள் ‘பேரழிவு’ ஆகலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.