TIk Tokகிற்கு நிரந்தர தடை.? 165 நாட்கள் அவகாசம் கொடுத்த அமெரிக்கா.!

Tik Tok in USA

Tik Tok : தற்போது இணைய உலகில் வைரலாக இருக்கும், ஷார்ட்ஸ் வீடியோ , இன்ஷார்ட்ஸ் வீடியோக்களுக்கு முன்னோடியாக ஒரு காலத்தில் கோலோச்சி இருந்தது சீனாவின் டிக் டாக் செயலி. அதன் பயன்பாடு உலகளவில் பல்வேறு நாடுகளில் இணையவாசிகள் மத்தியில் மிகபிரபலமாக இருந்தது.

இந்த செயலி மூலம் பயனர்களின் தரவுகள் கண்காணிக்கப்படுகிறது, அல்லது சட்டவிரோதமாக பயன்ப்படுத்தபடுகிறது என குற்றம் சாட்டி இந்தியா உட்பட ஒரு சில நாடுகளில் டிக் டாக் செயலி தடையை சந்தித்தது.

Read More – விமான பயணத்தின் போது நடுவானில் உயிரிழந்த 2 குழந்தைகளின் தாய்

அமெரிக்காவிலும் ஒரு சில மாகாணங்களில், தங்கள் நாட்டு பயனர்களின் தரவுகள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என கூறி டிக் டாக் செயலியானது தடை/கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிக் டாக் செயலிக்கு மேலும் ஒரு புதிய சிக்கல் தற்போது அமெரிக்க பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ளது.

அதாவது, டிக் டாக் செயலியின் உரிமையாளரான ByteDance நிறுவனம் சீனாவில் இருந்து விலகி, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டோ, அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்தோ இயங்கவேண்டும் எனவும் அதனை மீறினால் டிக் டாக் செயலிக்கு அமெரிக்கா முழுவதும் நிரந்தர தடை விதிக்க சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், அதன் மீதான விவாதம் நடைபெற உள்ளது என்றும் Reuters நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Read More – டிரிபிள் கேமரா..  5000mAh பேட்டரி.. பல அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது Vivo V30 series!

165 நாட்களுக்குள் (ஆறு மாதங்கள்) TikTok செயலியானது சீனாவில் இருந்து விலக வேண்டும் என பைட் டான்ஸ் நிறுவனத்தை கட்டாயப்படுத்தும் சட்டமசோதா மீதான வாக்கெடுப்பானது அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அடுத்த வாரம் நடைபெற உள்ளது.

இந்த சட்ட மசோதா அடுத்த வாரம் நிறைவேறினால் சுமார் 170 மில்லியன் அமெரிக்க பயனர்களைக் கொண்ட டிக் டாக் செயலியானது, சீனாவில் இருந்து விலகி வர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

Read More – ஒரு மணிநேரம் தான் முடக்கம்… பல்லாயிரம் கோடிகளை இழந்த மெட்டா நிறுவனம்!

இதுகுறித்து, டிக்டாக் செயலி தரப்பு கூறுகையில், அமெரிக்க பயனர்களின் தரவை சீன அரசாங்கத்துடன் நாங்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. வரும்காலத்திலும் பகிர்ந்து கொள்ளாது என்றும் கூறியது. இந்த மசோதாவானது, டிக் டாக் அமெரிக்காவை தலைமையாக கொண்டு இயங்கும் போது , சீனாவிலும் டிக் டாக் செயலி தொடர்ந்து செயல்படலாமா.? அல்லது ஆறு மாதங்களில் அது விலக்கப்படுமா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை.

இந்த மசோதாவின்படி, பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு டிக்டாக்கை சீனாவில் இருந்து விலக்க 165 நாட்கள் அவகாசம் கொடுக்கும். அதனையும் மீறி அவ்வாறு செய்யவில்லை என்றால், Apple, Google மற்றும் மற்ற இயங்கு தளங்களில் சட்டப்பூர்வமாக TikTok செயல்பட தடை விதிகப்படும்.

இந்தச் சட்டம், அமெரிக்காவில் டிக் டாக்கை மொத்தத் தடை செய்ய துடிக்கிறது என்றும், அரசாங்கம் 170 மில்லியன் அமெரிக்கர்களின் கருத்து சுதந்திரத்திற்கான பறிக்க முயற்சிக்கிறது என்றும், இது மில்லியன் கணக்கான வணிகங்களை பாதிக்கும் என்றும், கலைஞர்களுக்கு இது மிகவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் டிக் டாக் நிறுவனம் கூறிவருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்