Categories: உலகம்

என்னது உடலில் தானாக மதுபானம் சுரக்கிறதா? அரிய வகை நோயால் பெல்ஜியம் நபர் பாதிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

Belgium: உடலில் தானாக மதுபான சுரக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பெல்ஜியம் நபர் Drink and Drive கேஸியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இப்ப உள்ள காலகட்டத்தில் பலருக்கு புதிய புதிய அரிய வகை நோய் இருப்பது மருத்துவ நிபுணர்களால் கண்டறியப்பட்டு வருகிறது. அந்தவகையில் பெல்ஜியத்தில் ஒருவருக்கு உடலில் தானாக மதுபான சுரக்கும் auto brewery syndrome (ABS) என்ற அரிய வகை நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

பெல்ஜியத்தை சேர்ந்த 40 வயதான ஒருவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. ஏனெனில் அந்த நபர் ஆட்டோ ப்ரூவரி சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று இதனால் அவரது உடலில் தானாக ஆல்கஹால் சுரக்கும் எனவும் கூறப்படுகிறது.

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அது நபரை மூன்று மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினர். இதுகுறித்து பெல்ஜிய மருத்துவமனை AZ சின்ட்-லூகாஸின் மருத்துவ உயிரியலாளர் லிசா ஃப்ளோரின் கூறியதாவது, இதுபோன்ற அரியவகை நோயால் பாதிக்கப்ட்டுள்ளவர்களின் உடலில் தானாக மதுபான சுரக்கும்.

ஆனால் இதன் விளைவுகளை பாதிக்கப்பட்டவர்கள் குறைவாகவே உணர்வார்கள். ஏபிஎஸ் என்ற நோய் பிறக்கும்போதே வரக்கூடியவை அல்ல, குடல் தொடர்பான பாதிப்பில் அவதிப்படும்போது இதுபோன்ற அரியவகை நோய் உருவாகுகிறது. இந்த நோயானது வயிற்றில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை புளிக்க வைத்து, ரத்தத்தில் எத்தனால் அளவை அதிகரித்து, போதையின் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்றார்.

இதன் காரணமாக Drink and Drive கேஸியில் குற்றச்சாட்டப்பட்ட அந்த நபருக்கு போதை அறிகுறிகள் இல்லை என்று வழக்கின் தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தனர். இதனால் அந்த நபரை ப்ரூஜஸ் போலீஸ் நீதிமன்றம் உடனடியாக விடுவித்து உத்தரவிட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்! 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…

4 mins ago

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி? நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…

58 mins ago

அடுக்கப்பட்ட குற்றச்சாட்டு! அதானி குழுமம் உடனான 2 திட்டங்களை ரத்து செய்தது கென்யா!

நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…

2 hours ago

எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு! திருமாவளவன் பளீச் பேச்சு!

திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…

13 hours ago

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்! உடல்நிலை எப்படி இருக்கிறது? என்ன உணவு உட்கொள்கிறார்?

நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…

14 hours ago

இஸ்ரேல் பிரதமருக்கும், ஹமாஸ் தலைவருக்கும் எதிராக கைது வாரண்ட்!

கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…

14 hours ago