7000 ஆண்டுகள் பழமையான கற்சாலை… மத்திய தரைக்கடலுக்குள் கண்டுபிடிப்பு.!

7000Old Road

7000 ஆண்டுகள் பழமையான கற்சாலை மத்திய தரைக்கடலின் அடிப்பகுதியில் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு, கடலுக்கு அடியில் சென்று மத்திய தரைக்கடல் அடியில் மறைந்திருந்த 7000 ஆண்டுகள் பழமையான கற்சாலையை கண்டுபிடித்துள்ளது. இந்த சாலை குரோஷிய தீவில் அமைந்துள்ள கோர்குலா கடற்கரை மற்றும் பழங்கால ஹவார் கலாச்சாரத்திற்கு முந்தைய வரலாற்றின் நாகரிகத்துடன் இணைத்ததாக நம்பப்படுகிறது.

நான்கு மீட்டர் அகலத்துடன் கவனமாக அடுக்கப்பட்ட கல் அடுக்குகளால் இந்த சாலை உருவாக்கப்பட்டுள்ளது. குரோஷியாவின் ஜாதார் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது பேஸ்புக் பதிவில், தொல்பொருள் ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 7000 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் நடந்து சென்ற சாலை குறித்து வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது ஹவார் கலாச்சார மக்கள் வாழ்ந்த கற்கால குடியேற்றத்தின் ஒரு பகுதியாக இந்த சாலை உள்ளது, அவர்கள் கடற்கரை மற்றும் அருகிலுள்ள தீவுகளில் சிறிய, தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களில் வாழ்ந்த திறமையான விவசாயிகள் மற்றும் மேய்ப்பர்கள் என கூறினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்