தன்னைத்தானே சுட்டுக் கொண்ட 4 வயது சிறுவன்..! பெற்றோர் மீது வழக்குப்பதிவு..!

Baby

அமெரிக்காவில் 4 வயதான ரோனி லின், ஜூலை 6 ஆம் தேதி ரோஸ்ட்ராவர் டவுன்ஷிப்பில் உள்ள காடியோ டிரைவில் உள்ள தனது வீட்டில் தற்செயலாக கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். இதனையடுத்து அவர், மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த நிலையில், சிறுவன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வெஸ்ட்மோர்லேண்ட் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உதவியுடன் ரோஸ்ட்ராவர் போலீஸார் கடந்த பல மாதங்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காசா போர் நிறுத்தம் தீர்மானம்.! அப்போது புறக்கணிப்பு.! இப்போது இந்தியா ஆதரவு.!

சிறுவனை காயப்படுத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, மாவட்ட வழக்கறிஞர் சிறுவனின் பெற்றோர்களான லாரா ஸ்டீல் மற்றும் மைக்கேல் லின் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளார். இருவரும் குழந்தைகளின் நலனுக்கு ஆபத்தை விளைவித்ததாகவும், பொறுப்பற்ற முறையில் மற்றொரு நபருக்கு ஆபத்தை விளைவித்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வழக்கறிஞர் நிக்கோல் ஜிக்கரெல்லி கூறுகையில், இது ஒரு சோகமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத துப்பாக்கிச் சூடு, இது  தடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வகையான சம்பவங்கள் நிகழாமல் தடுக்க ஒரு எளிய தீர்வு உள்ளது,  உங்கள் துப்பாக்கிகளை பாதுகாப்பான இடத்தில் வைத்திருப்பது சிறந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்