அதிகாலையில் அதிர்ச்சி : மியான்மரில் நிலநடுக்கம்! 4.8 ரிக்டர்.., 106 கிமீ ஆழம்…
மியான்மர் நாட்டில் 4.8 ரிக்டர் எனற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

நைபியிடவ் : இன்று (ஜனவரி 24) அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய அரசின் தேசிய நில அதிர்வு மையமான NCS தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
NCS வெளியிட்டுள்ள தகவலின்படி, மியான்மர் நாட்டில் 24 ஜனவரி (இன்று) அதிகாலை 12.53 மணியளவில் 4.8 ரிக்டர் எனும் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், இந்த நில அதிர்வு கடல் மட்டத்தில் இருந்து 106 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அட்சரேகை 24.92 N மற்றும் தீர்க்கரேகை 94.97 E இல் அமைந்துள்ளது எனவும தெரிவிக்கப்பட்டுள்ளது .
4.8 ரிக்டர் என்பதால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என கூறப்படுகிறது. இருந்தும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தற்போது அந்நாட்டு அரசால் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025