தந்தையின் துப்பாக்கியை வைத்து விளையாட்டாக 2 வயது குழந்தை..! 8 மாத கர்ப்பிணி உயிரிழப்பு..!
அமெரிக்காவில், ஓஹியோ மாகாணத்தில் 2 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவனின் கர்ப்பிணி தாய் மற்றும் கருவில் இருந்த சிசு இருவரும் உயிரிழப்பு.
அமெரிக்காவில், ஓஹியோ மாகாணத்தில் 2 வயது சிறுவன் ஒருவன் தனது தாயை துப்பாகையால் சுட்டதில் அப்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் தனது தந்தையின் கைத்துப்பாக்கியை டிராயரில் இருந்து விளையாடுவதற்காக
துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்த போது, தவறுதலாக சிறுவன் தனது தாய் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். சிறுவனின் தாய் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரது முதுகு பகுதியில் துப்பாக்கி சூடு பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவருக்கு பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அப்பெண் மற்றும் கருவில் இருந்த சிசு இருவருமே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் வருகின்றனர். ஆனால், இந்த சம்பவத்தில் எந்த வழக்கும் பதிவு எனக் கூறப்படுகிறது.