புரோட்டீன் ஷேக்கால் பரிதாபமாக உயிரிழந்த 16 வயது சிறுவன்..! நடந்தது என்ன…?
லண்டனில் ரோகன் கொதானியா என்ற 16 வயது சிறுவன் புரோட்டின் ஷேக் உட்கொண்டதால் உயிரிழப்பு.
மேற்கு லண்டனில் உள்ள ஹீலிங் மாவட்டத்தில் ரோகன் கொதானியா என்ற 16 வயது சிறுவன் புரோட்டின் ஷேக் உட்கொண்டதால் நோய்வாய்ப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனின் தந்தை, தனது மகன் மிகவும் ஒல்லியாக இருப்பதாக கருதி, அச்சிறுவனுக்கு அதனை உட்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, ரோஹனின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், வெஸ்ட் மிடில்செக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்களுக்கு பின் அவருங்க்கு மூளை சம்பந்தமான பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். ரோஹனின் மரணத்திற்கு என்ன காரணம் என்று ஆரம்பத்தில் தெரியவில்லை. ஏனெனில் அவரது உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் ரோஹனின் மரணம் குறித்த சமீபத்திய நீதி விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதாவது, புரோட்டீன் ஷேக் குடித்ததால் அந்த சிறுவனுக்கு ஒரு அரிய மரபணு பாதிப்பு ஏற்பட்டதாகவும், அது மீள முடியாத மூளை பாதிப்புக்கு வழிவகுத்தது என்றும், இந்த பாதிப்பால் சிறுவன் உயிரிழக்க நேரிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.