ஒரு புதிய ஆய்வில் 95% குரங்கு அம்மை பாலியல் செயல்பாடு மூலம் பரவுகின்றன என தெரியவந்துள்ளது.
கொனோரியா, ஹெர்பெஸ் அல்லது எச்.ஐ.வி போன்ற ஒரு வேரூன்றிய பாலியல் செயல்பாடு மூலம் பரவும் நோயாக (STD) இருக்கலாம் என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் வெளியிட்டுள்ள புதிய ஆராய்ச்சியின்படி, 95% குரங்கு அம்மை நோய் பாலியல் செயல்பாடு மூலம் பரவுகின்றன என தெரிவித்துள்ளது .
லண்டன் குயின் மேரி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது ஏப்ரல் 27 மற்றும் ஜூன் 24, 2022 க்கு இடையில் 16 நாடுகளில் 528 உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளை ஆய்வு செய்தது.
ஒட்டுமொத்தமாக, நோய்த்தொற்று உள்ளவர்களில் 98 சதவீதம் பேர் ஓரின சேர்க்கையாளர்கள் அல்லது இருபாலின ஆண்கள், 75 சதவீதம் பேர் வெள்ளையர்கள், 41 சதவீதம் பேர் மனித நோயெதிர்ப்பு குறைபாடு வைரஸ் (எச்ஐவி) தொற்று உள்ளவர்கள்.
குரங்கு பாக்ஸ் உள்ளவர்களில் புதிய மருத்துவ அறிகுறிகளையும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த அறிகுறிகளில் ஒற்றை பிறப்புறுப்பு புண்கள் மற்றும் வாய் அல்லது ஆசனவாயில் புண்கள் அடங்கும். குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவரின் நெருங்கிய உடல் தொடர்பு மூலமும், அவர் பயன்படுத்தும் துணிகள் மூலமாகவும் இது பரவுகிறது.
காய்ச்சல், உடல்வலி, குளிர், சோர்வு மற்றும் உடலின் பாகங்களில் கொப்பளங்கள் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். பரிசோதிக்கப்பட்ட 377 நபர்களில் (29 சதவீதம்) 109 பேருக்கு ஒரே நேரத்தில் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டு 15,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு வரலாற்று ரீதியாக குரங்கு அம்மை நோயைக் காணாத நாடுகளில் பதிவாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், பெரும்பாலான நோய்த்தொற்றுகள் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடமே ஏற்பட்டுள்ளன.
குரங்கு அம்மையின் அறிகுறிகள் பல பாலியல் ரீதியாக பரவும் நோய்களின் (STDs) அறிகுறிகளைப் போலவே உள்ளதால், இது தவறான நோயறிதலுக்கு வழிவகுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
குரங்கு அம்மை ஒரு பாலியல் ரீதியாக பரவும் நோயாக மாறினால், அது ஏற்கனவே உள்ள STD களைக் கட்டுப்படுத்த போராடும் சுகாதாரத் துறைகளுக்கும் மருத்துவர்களுக்கும் மற்றொரு சவாலாக இருக்கும்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…