ஹிஸ்புல்லா தலைவர் மறைவு.. இஸ்ரேல் பயன்படுத்திய 900 கிலோ அமெரிக்க குண்டுகள்.!

இஸ்ரேல் பயன்படுத்திய குண்டுகள் அமெரிக்க வழிகாட்டப்பட்ட ஆயுதங்கள் என்று அமெரிக்க செனட்டரை மேற்கோள்காட்டி தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் கூறியுள்ளது. 

US-made 900 kg bombs

லெபனான் : பெய்ரூட்டில் நேற்று முன் தினம் இஸ்ரேல் ராணுவத்தால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா உயிரிழந்த பிறகு, ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக ஹசன் கலீல் யாசின் நேற்று அறிவிக்கப்பட்டார்.

அவர், தலைவராக அறிவிக்கப்பட்ட 6 மணி நேரத்தில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ITF தனது எக்ஸ் பதிவில், தங்களது தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் பாதுகாப்பு பிரிவு தளபதியும், நிர்வாகக் குழு உறுப்பினருமான நபில் கவுக் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து லெபனான் மீது, இஸ்ரேல் குண்டு மழை பொழிவதால் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், இந்த வார தொடக்கத்தில் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள குடியிருப்புக் கட்டிடங்களை தரைமட்டமாக்கிய தாக்குதலில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 900 கிலோ (2,000-பவுண்டு) குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தியிருக்கலாம் என்று அமெரிக்க செனட்டரை மேற்கோள்காட்டி, தி வாஷிங்டன் போஸ்ட் என்கிற அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, 60 அடி பள்ளத்தில் பதுங்கி இருந்த ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லாவை சுமார் 80 ஆயிரம் குண்டுகளை வரிசையாக வீசி கொன்றதாக கூறப்படுகிறது. தலைநகர் பெய்ரூட்டின்  கோட்டை என அழைக்கப்பட்ட டாக்கியாவில் அடுக்குமாடி குடியிருப்பின் அடியில் சுமார் 60 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையில் ஹிஸ்புல்லா தலைவர்களின்  ஆலோசனை கூட்டம் நடந்து வந்தது.

கடந்த 2006 முதல் முதல் எந்தவித நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்த நஸ்ருல்லவின் உன்னிப்பாக கண்காணித்து வந்த இஸ்ரேல் உளவுத்துறை முக்கிய ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்பதாக உறுதி செய்ததை அடுத்து ராணுவத்திற்கு தகவல் அளித்ததும் இந்த பெரிய தாக்கத்தால் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலின் நீண்டகால நட்பு நாடான அமெரிக்கா, மிகப்பெரிய ஆயுத சப்ளையராக இருந்து வருகிறது. குறிப்பாக, வாஷிங்டன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு 2,000-பவுண்டு வெடிகுண்டுகளை அனுப்புவதை நிறுத்தியது. பின்னர், பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக இருந்த 500-பவுண்டு (227 கிலோ) குண்டுகளை வெளியிட ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 105 பேர் உயிழந்தனர் மற்றும் 359 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்