9 மாத காத்திருப்பு… 17 மணி நேர பயணம்! விண்வெளி வீரர்கள் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டது ஏன்?

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும்போது, ​​தரையிறங்கியவுடன் உடனடியாக நடக்க முடியாது. இது விண்வெளியில் ஏற்படும் உடலில் ஏற்படும் தற்காலிக மாற்றங்களால் ஏற்படுகிறது.

Sunita Williams - NASA

ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ் X-ன் ‘ட்ராகன்’ விண்கலம் மூலம், கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு 17 மணி நேர பயணத்திற்குப் பின், இன்று பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.

இன்று (மார்ச் 19 ஆம் தேதி) இந்திய நேரப்படி அதிகாலை 3.27 மணியளவில் அமெரிக்காவின் புளோரிடா கடல்பகுதியில் டிராகன் கேப்சூல் இறங்கியது. தரையிறங்கிய கேப்சூலை உடனே நாசா குழுவினர் சிறிய படகுகள் மூலம் கப்பலுக்கு கொண்டு வந்தனர்.

மீட்புக் கப்பல் அதைத் தூக்கிய பிறகு, கேப்சூல் கதவு திறக்கப்பட்டு சுனிதாவும், 4 விண்வெளி வீரர்களும் வெளியே கொண்டு வரப்பட்டனர். முதலில் வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ் சிரித்தபடியே கை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஒன்றன் பின் ஒன்றாக 4 விண்வெளி வீரர்களும் பத்திரமாக வெளியே அழைத்து வரப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு ஸ்ட்ரெச்சரில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும்  புட்ச் வில்மோர் ஆகியோரை ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்துச் செல்லப்பட்டதற்கு முக்கிய காரணம், அவர்கள்  நீண்ட காலம் விண்வெளியில் தங்கியிருந்ததால் ஏற்பட்ட உடலியல் மாற்றங்கள் எனக்கின்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார் 9 மாதங்கள் (270 நாட்களுக்கு மேல்) செலவிட்ட பிறகு, பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப மீண்டும் பழகுவதற்கு அவரது உடல்கள் ஒத்துழைக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

ஆதாவது, விண்வெளியில் ஈர்ப்பு விசை கிட்டத்தட்ட இல்லாத நிலையில், மனித உடல் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. பூமியில், நமது தசைகள் மற்றும் எலும்புகள் ஈர்ப்பு விசையை எதிர்த்து தொடர்ந்து வேலை செய்கின்றன. ஆனால் விண்வெளியில் இந்த எதிர்ப்பு இல்லாததால், தசை இழப்பு காரணமாக கால்கள் மற்றும் முதுகு தசைகள் பலவீனமடைகின்றன, இதனால் நடப்பது அல்லது நிற்பது போன்ற பணிகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை.

அதன்படி, விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால் மிதக்கும் நிலையிலேயே நீண்ட நாட்கள் இருந்துவிட்டு பூமிக்குத் திரும்பியதும் உடனடியாக எழுந்து நடக்க முடியாது. இதனாலேயே, விண்கலத்தில் இருந்து வெளியே வந்ததும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு, அவர்கள் சாதாரண நிலைக்குத் திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்வெளி வீரர்கள் நலம்

இதனிடையே, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் நலமுடன் இருப்பதாக நாசா அறிவித்துள்ளது. இருவரும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான நடைமுறை

நீண்ட கால விண்வெளி பயணங்களுக்குப் பிறகு, விண்வெளி வீரர்களை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்வது நாசாவின் பொதுவான நடைமுறையாகும். உதாரணமாக, 2006-ல் சுனிதாவின் முதல் பயணத்திற்குப் பிறகும் இதேபோல் நடந்தது. இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களுக்கு உடனடி ஓய்வு அளிப்பதற்கும், உடல் சோர்வைத் தவிர்ப்பதற்கும் உதவுகிறது என்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
veera dheera sooran S. J. Suryah
Nagpur Violence
chennai budget
hardik pandya and suryakumar yadav
Puducherry CM Rangasamy
RRB alp exam