உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர்
உக்ரைனின் இராணுவம் கடந்த ஒரு நாளில் மட்டும் 800 ரஷ்ய வீரர்களை கொன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் ஓயாத அலைபோல் குண்டுகள் முழங்கிக்கொண்டு இருக்கிறது.உக்ரைன் ராணுவம் நடத்திய தாக்குதலில் கடந்த ஒரு நாளில் மட்டும் 800க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும், ஒரு விமானம், ஹெலிகாப்டர் மற்றும் மூன்று டாங்கிகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ரஷ்ய விமானம், ஏவுகணை தாக்குதல்களின் விளைவாக, உக்ரேனிய கட்டுப்பாட்டில் உள்ள நகரமான பாக்முட் மற்றும் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.