இங்கிலாந்து: பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 8 தமிழர்கள் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
இங்கிலாந்து நாட்டில் உள்ள மொத்தம் 650 தொகுதிகளும் ஒரே கட்டமாக நாட்டின் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக தற்போதைய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பிரதமர் வேட்பாளராகவும், தொழிலாளர் கட்சி சார்பாக கீர் ஸ்டார்மர் பிரதமர் வேட்பாளராகவும் களமிறங்கி உள்ளனர். இதில் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.
அதே போல, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த 8 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர். உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகிய 8 தமிழர்கள் பிரிட்டன் தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர்.
பிரிட்டனில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணிக்கு துவங்கும் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு இரவு 10 மணிக்கு நிறைவு பெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலையிலேயே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…