Shocking: மெக்சிகோவில் கர்ப்பிணியை கொலை செய்து வயிற்றிலிருந்து 8 மாதக்குழந்தையை திருடிய பெண் கைது !
மெக்சிகோவில் கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு அவரது 8 மாதக் குழந்தை வயிற்றில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவை சேர்ந்த ரோசா இசெலா என்ற 20 வயதான எட்டு மாத கர்ப்பிணி பெண் கொலைசெய்யப்பட்டு, அவரது வயிற்றை வெட்டி கருவில் இருந்த குழந்தையை திருடியுள்ளனர். இதுகுறித்து நடந்த விசாரணையில், ஆன்லைனில் ஒரு பெண் இவரது குழந்தைக்கு உடைகள் தருவதாக கூறி கிழக்கு மாநிலமான வெராக்ரூஸில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு மருந்தகத்தில் அந்தப் பெண்ணைச் சந்திக்க திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
மருந்தகத்திற்கு வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவில், இவரை அந்த பெண் ஒரு காரில் கூட்டிச் செல்வது பதிவாகியிருந்தது. இதன் மூலம் அந்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வயிற்றிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
கொலை செய்த பெண்ணை விசாரித்த போலீசார், இந்த பெண்ணால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததால், கருவை பிரித்தெடுக்க அப்பெண்ணை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இந்த சம்பவமானது, ஒரு கர்ப்பிணிப் பெண்ணைக் கொன்றதற்காக டெக்சாஸ் நீதிமன்றத்தில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதித்த ஒரு மாதத்திற்குள் நடந்துள்ளது.