ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழப்பு..!

military plane

உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு பெல்கோரோடில் ரஷ்ய போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதில் 74 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் எஸ்-300 ஏவுகணை மூலம் உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து ரஷ்யா தரப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. விமானத்தில் 65 உக்ரைன் போர்க் கைதிகள், ஆறு பணியாளர்கள் மற்றும் மூன்று இராணுவ வீரர்கள் இருந்தனர். இந்த போர் கைதிகள் உக்ரைனில் நடந்து வரும் போரின் போது பல்வேறு பகுதிகளில் இருந்து ரஷ்ய ராணுவத்தால் பிடிக்கப்பட்டனர்.

விபத்துக்குள்ளான ரஷ்ய இராணுவ போக்குவரத்து விமானம் Ilyushin-76 ஆகும். 65 உக்ரைன் போர்க் கைதிகள் உயிரிழந்ததை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதற்கான சரியான காரணத்தை ரஷ்யா இதுவரை தெரிவிக்கவில்லை. விபத்துக்குள்ளனா பெல்கொரோட் பகுதி உக்ரைன் எல்லையை ஒட்டி உள்ளது.

அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவு..!

உக்ரைன் ராணுவமும் இந்த பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்பு பெல்கோரோடில் உக்ரைன் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட ரஷ்ய மக்கள் கொல்லப்பட்டனர். Ilyushin-76 என்பது , இராணுவ உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை விமானத்தில் ஏற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இராணுவ போக்குவரத்து விமானமாகும். இந்த விமானத்தில் 90 பேரை ஏற்றிச் செல்ல முடியும் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தவர்கள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை. சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் என்று உக்ரைன் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பெல்கோரோட் எல்லைப் பகுதியில் ரஷ்ய ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். மேலும், ரஷ்யர்கள் உக்ரைன் கைதிகளின் வாழ்க்கை, அவர்களின் உறவினர்களின் உணர்வுகளில் விளையாடுகிறார்கள் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation