வழுக்கை தலையால் வேலை இழந்த நபருக்கு நீதிமன்ற உத்தரவால் சுமார் 71 லட்சம் கிடைத்த சம்பவம் இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் உள்ள டேங்கோ நெட்வொர்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வழுக்கை தலையுடன் இருக்கும் 50 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு இனி வேலை கிடையாது என்று மேலாளரால் வலுக்கட்டாயமாக பணிபுரிந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 61 வயதுடைய மார்க் ஜோன்ஸ் என்ற நபர் லீட்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.தான் தலையில் முடி நிறைந்திருந்த போதிலும், தான் தவறாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதுபற்றி மேலாளர் பிலிப் ஹெஸ்கெத் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில் நானும் வழுக்கை தலையுடன் இருப்பதால் அலுவலகத்தில் உள்ளவர்களும் அது போன்று இருப்பதை நான் விரும்பவில்லை என்றும் ஆற்றல் மிகுந்த இளமையான நபர்கள் இருந்தால் தான் வேலைகள் விரைவாகவும் தெளிவாகவும் நடக்கும் என்று கூறினார்.இதனை ஏற்கமறுத்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு நஷ்டஈடாக 71,441 பவுண்டுகள் (₹71 லட்சம்) வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இச்சமூகத்தில் வயது முதிர்வு என்பது துறையை பொறுத்து மாறுபடுகிறது அதுவும் நாம் வைத்திருக்கும் பிம்பமான அளவால் விளையாட்டு,சினிமா என்று குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் மாறுபடுகிறது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…