70,000 அரசு ஊழியர்களின் வேலை ‘காலி’.? அர்ஜென்டினா அதிபர் அதிரடி.!

Argentina President Javier Milei

Argentina : அர்ஜென்டினா பொருளாதாரம் சரிவு காரணமாக அந்நாட்டில் 70 ஆயிரம் பேர் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அர்ஜென்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மிலே (Javier Milei) கடந்த டிசம்பர் மாதம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றது முதல் அந்நாட்டின் பொருளாதரம் சரிவை சந்தித்து வருகிறது. தனியார் நிறுவன ஊழியர்களின் ஊதியம் மட்டுமல்லாது அரசு ஊழியர்களின் நிலையும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

நேற்று முன்தினம், நாட்டின் பொருளாதாரம் குறித்து அதிபர் ஜேவியர் மிலே பேசுகையில், நாட்டின் பொருளாதர சூழலை கருத்தில் கொண்டு சுமார் 2 மில்லியன் டாலர் மதிப்புள்ள திட்டங்களை தற்போது நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் நாட்டின் நிதிநிலையை சமப்படுத்த முயல்வதாக குறிப்பிட்டார்.

276 சதவீத வருடாந்திர பணவீக்கத்தால் அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்கள் அளிப்பதில் கூட சிரமம் உள்ளது என்றும், நமது நாட்டின் நிதி நிலையை சரிசெய்வதில் நிறைய சிக்கல்கள் உள்ளன என்றும் மிலே கூறினார்.

அர்ஜென்டினா அதிபரின் இந்த பேச்சை அடுத்து வெளியான தகவலின் படி, அடுத்த சில மாதங்களில் சுமார் 70 ஆயிரம் அரசு ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர் என்றும் , நாட்டில் மொத்தமாக இருக்கும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 35 லட்சம் பேர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.  அரசின் இந்த நடவடிக்கைகள் நாட்டின் தொழிலாளர் சங்கங்களில் அதிக எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்