இத்தாலியின் இஷியா தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குழந்தை உட்பட 7பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு இத்தாலிய தீவான இஷியாவில் பெய்த கன மழையினால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி, பிறந்த குழந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது ஏழு பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரி தெரிவித்தார். மேலும் 5பேரைக் காணவில்லை என்றும், மீட்புப் பணியாளர்கள் விரைந்து கடலோரப்பகுதியில் தேடி வருகின்றனர்.
இந்த நிலச்சரிவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து, பல கார்கள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டதாகவும் உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார். இஷியா தீவில் கிட்டத்தட்ட 6 மணி நேரம் விடாமல் கனமழை பெய்ததாகவும், இது 20 ஆண்டுகளில் இல்லாத அதிக மழை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நில அதிர்வு தீவிரமான மண்டலத்தில் உள்ள மலைப்பாங்கான தீவில் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் கட்டிடம் கட்டுவதால் இது போன்ற பேரழிவுகள் நடைபெறுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும் இஷியா தீவில் சட்டவிரோதமாக பலர் வீடுகள் கட்டி வசித்து வருவதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…