துருக்கி: ஸ்கை ரிசார்ட் ஹோட்டலில் பயங்கர தீ விபத்து! 66 பேர் பலி… பலர் காயம்!

போலு மாகாணத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்கை ரிசார்ட்டில் நள்ளிரவு திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

Turkey ski resort

போலு : துருக்கியின் போலு மாகாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த தீ விபத்தில் சிக்கி, 66 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்று அதிகாலை அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த கோர விபத்து நடந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அமைச்சர் அலி ஏர்லிகயா தெரிவித்துள்ளார்.

போலு மாகாணத்தின் மலைப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கர்தலகாயா ஸ்கை ரிசார்ட்டில் இந்த விபத்து நள்ளிரவு 3:30 மணியளவில் (0030 GMT) ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. 11 மாடிகள் கொண்ட கிராண்ட் கார்டால் ஹோட்டலில் 234 பேர் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

இந்த தீ விபத்து ஏற்பட்டபோது, பல விருந்தினர்கள் பீதியடைந்து ஜன்னல்களில் இருந்து குதித்து தப்பினர். விருந்தினர்கள் படுக்கை விரிப்பைப் பயன்படுத்தி தப்பிக்க முயன்றபொழுது, தீயணைப்பு வீரர்கள் ஹோட்டலைச் சுற்றி பாதுகாப்புடன் மீட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்