டொமினிகனில் விடுதி மேற்கூரை சரிந்து 79 பேர் உயிரிழந்த சோகம்.!
டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள பிரபல ஜெட் செட் இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்தது.

டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்தனர். கூரை இடிந்து விழும் முன்னர், அந்த விடுதியில் Rubby Pérez’s என்பவரது இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது.
இந்த துயரச் சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மேடையில் நடனக் கலைஞர்கள் நடனமாடுவதையும், பார்வையாளர்கள் ஆரவாரம் செய்வதையும் காணொளியில் படம்பிடித்து கொண்டிருந்தனர். கூரை திடீரென இடிந்து விழுந்ததால் கொண்டாட்டமே சோகமாக மாறியது.
🚨🇩🇴13 DEAD, 93 INJURED IN NIGHTCLUB ROOF COLLAPSE IN THE DOMINICAN REPUBLIC
This comes after the roof of the Jet Set nightclub in Santo Domingo, Dominican Republic, collapsed earlier this morning.
The national police confirmed the death toll and said search and rescue… pic.twitter.com/yAdkTqw8yX
— Mario Nawfal (@MarioNawfal) April 8, 2025
இடிபாடுகள் ஏற்பட்டபோது அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் அங்கு இருந்தனர். மேலும், இந்த விபத்தில் மேலும் பலர் காணாமல் போய் உள்ளதால், பலியானவர்களில் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
பாடகர் Rubby உள்பட மொத்தம் 121 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையின் போது, 160 பேர் வெளியேற்றப்பட்டனர், அவர்களில் பலர் படுகாயமடைந்தனர். சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குப் பிறகும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
#BREAKING Death toll in Dominican nightclub disaster rises to 79, say rescuers pic.twitter.com/giU4HczZV8
— AFP News Agency (@AFP) April 9, 2025
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025