கடும் வெப்பம்: ஹஜ் யாத்திரை சென்ற 68 இந்தியர்கள் உட்பட 645 பேர் மரணம்.!
சவுதி அரேபியா : இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது, குறைந்தது 68 இந்தியர்கள் கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் உயிரிழந்தனர். இதனால் ஒட்டுமொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600 க்கும் அதிகமாக கடந்ததாக சவுதி அரேபியாவில் உள்ள தூதரக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையில் 323 எகிப்தியர்களும் 60 ஜோர்டானியர்களும் அடங்குவர். மேலும், இந்தோனேசியா, ஈரான், செனகல், துனிசியா மற்றும் ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் ஆகிய நாடுகளிலும் உள்ளவர்களும் உயிழந்தது தெரிய வந்துள்ளது.
இந்த ஆண்டு 1.8 மில்லியன் யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், அவர்களில் 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்ததாகவும், அதில் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்காக மொத்தம் 1,75,000 இந்தியர்கள் சவூதி அரேபியா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு 200க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டது, அவர்களில் பெரும்பாலோர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள். கடந்த பல ஆண்டுகளாக சவூதி அரேபிய கோடைக்காலத்தில் ஹஜ் பயணம் குறைந்து வருகிறது.