அதிர்ச்சி…ஒரே ஜாடையில் 60 குழந்தைகள்..! வசமாக சிக்கிய தந்தை..!
ஆஸ்திரேலியாவில் ஒரே ஜாடையில் 60 குழந்தைகள் பிறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள நபர் ஒருவர் போலியான பெயரில் பல முறை விந்தணுக்களை தானம் செய்துள்ளார். இதனால் ஒரே முக ஜாடையுடன் கூடிய 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பெண்கள் பெற்றோருக்கான சந்திப்பிற்க்காக ஒன்றுகூடும் போது அவர்களின் குழந்தைகளிடையே ஒற்றுமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த அதிர்ச்சி மிகுந்த சம்பவத்திற்கு காரணமான நபரைப் பற்றி ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பெற்றோர்கள் விசாரித்தனர். இதையடுத்து சிட்னியை தளமாகக் கொண்ட ஃபெர்டிலிட்டி ஃபர்ஸ்ட் (Fertility First) என்ற மருத்துவமனையின் டாக்டர் ஆன் கிளார்க், அவர் விந்தணு தானத்திற்கு பேஸ்புக் குழுக்களைப் பயன்படுத்தியதாகவும், அந்த நபர் தனது மருத்துவ மனைக்கு ஒருமுறை மட்டுமே விந்தணு தானம் செய்தார் என்றும் கூறினார்.
இது போன்று மனித விந்தணுக்களை தானம் செய்து அதற்கு உரிய பணம் மற்றும் பரிசுகளை பெறுவது ஆஸ்திரேலியாவில் மனித திசு சட்டத்தின் கீழ் குற்றமாகும். இதற்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.