ஆசிரியரை சுட்டுக் கொன்ற 6 வயது சிறுவன்! அமெரிக்காவில் பயங்கரம்.!
அமெரிக்காவில் 6 வயது சிறுவன் வகுப்பறையில், ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஆரம்பப்பள்ளியில் படித்துவரும் 6 வயதேயான சிறுவன், வகுப்பறையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஆசிரியை ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். ரிச்னெக் ஆரம்பப்பள்ளியில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 30 வயதான ஆசிரியைக்கு குண்டு பட்டதில் உயிருக்கு போராடி வருகிறார்.
வேறு எந்த மாணவரும் காயமடையவில்லை என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தற்செயலாக நடந்ததல்ல. ஆசிரியை தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த சிறுவன் போலீசார் காவலில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.