காபூலில் தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு!
காபூலில் தலிபான்களின் வெளியுறவு அமைச்சகம் அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தகுந்தாலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். காபூலில் தலிபான்களின் வெளியுறவு அமைச்சகம் அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 6 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் ஒரு குழந்தை உட்பட 12 பேர் காயமடைந்தனர் எனவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர் ஆப்கானிஸ்தான் படைகளால் அடையாளம் காணப்பட்டார், ஆனால் அவர் வைத்திருந்த வெடிமருந்துகள் வெடித்து 6 பேரை கொன்றது மற்றும் பலரைக் காயப்படுத்தியது என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் நஃபி தாகோர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வெளி விவகார அமைச்சகத்துக்கு அருகே உள்ள வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்குள் காபூலில் நடந்த இரண்டாவது தாக்குதலாகும். மேலும் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோம்பு பண்டிகை ஆப்கானிஸ்தானில் கடந்த வியாழன் அன்று தொடங்கியதில் இருந்து இது முதல் தாக்குதலாகும்.