ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு!
Earthquake : ஜப்பானியில் இரண்டாவது முறையாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தைவான் நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியையை பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அந்நாட்டின் தலைநகரான தைப்பேவில் நேற்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 9 பேர் உயிரிழந்த நிலையில், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதுமட்டுமில்லாமல், தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை ஜப்பானின் ஹோன்ஷூ கிழக்கு கடற்கரைக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 32 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதில் குறிப்பாக ஹொன்ஷு கிழக்கு கடலோர பகுதியில் 2-வது முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.