பாகிஸ்தானில் கொளுத்தும் வெயிலில் சிக்கி 568 பேர் பலி.!
பாகிஸ்தான் : தெற்கு பாகிஸ்தானில் வெப்பநிலை அதிகரித்ததால், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்தது. பாகிஸ்தானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு வெயில் வாட்டி வருகிறது. கடந்த 6 நாள்களில் மட்டும் 568 பேர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கராச்சியில் வெப்பநிலை 40C (104F) க்கு மேல் உயர்ந்ததால், இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. கராச்சி சிவில் மருத்துவமனையில் 267 பேர் வெப்பம் தொடர்பான உடல்நிலை பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயிரக்கணக்கானோர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக வெப்பம் வாட்டி வதைக்கும் சிந்து மாகாணத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மருத்துவர், செவிலியர் போன்ற சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பை அரசு ரத்து செய்துள்ளது. கொளுத்தும் வெயிலால் பாகிஸ்தானின் கராச்சி மட்டும் சமாளிக்க முடியாமல் திணறுகிறது.