மத்திய அமெரிக்காவில் கோர விபத்து! பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து., 55 பேர் பலி!

மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலா நாட்டில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Guatemala bus accident

குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள கால்வாய் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 55 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்த்தில் உயிரிழந்த அனைவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கோரப்பட்டுள்ளது.

இந்த பேருந்தானது வழக்கமாக குவாத்தமாலா பகுதியில் சான் கிறிஸ்டோபல் அகாசாகஸ் குவாஸ்ட்லான் மற்றும் குவாத்தமாலா நகரத்திற்கு இடையே செல்லும் என்றும், பிப்ரவரி 10ஆம் தேதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் சான் அன்டோனியோ லா பாஸ் கிராமத்திலிருந்து புறப்பட்ட பேருந்து சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, குவாத்தமாலா நகரின் புறநகரில் உள்ள 20 மீ (65 அடி) உயரம் கொண்ட கழிவுநீர் செல்லும் பாலத்தில் தவறி விழுந்தது.

அந்த விபத்து குறித்து அறிந்த மீட்புப்படையினர் விரைவாக செயல்பட்டு அங்கிருந்து மொத்தம் 53 உடல்களை மீட்டனர். 2 பேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெருவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து உயிரிழப்புகள் தொடர்பாக அதிபர் பெர்னார்டோ அரேவலோ குவாத்தமாலாவில் மூன்று நாட்கள் தேசிய துக்கம்  அனுசரிக்கப்படும் என அறிவித்தார்.

குவாத்தமாலாவின் தகவல் தொடர்பு அமைச்சர் மிகுவல் டியாஸ் போபாடில்லா உள்ளூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்தப் பேருந்து சுமார் 30 ஆண்டுகள் பழமையானது. பயணம் செய்யும் உரிமத்தை அந்த பேருந்து கொண்டிருந்தது. அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதல் பயணிகள் ஏறினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்றும், பேருந்தில் பிரேக்குகள் செயலிழந்திருக்கலாம் அதனால் கூட விபத்து ஏற்பட்டிருக்கும் என அனைத்து தரப்புகளும் விசாரிக்கப்படும் என அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்