வான்வழித் தாக்குதலில் 27 காசா பொதுமக்கள் உட்பட 51 பேர் கொல்லப்பட்டனர்!!
இஸ்ரேல் மற்றும் காசாவை தளமாகக் கொண்ட தீவிரவாதிகளுக்கு இடையே சமீபத்தில் நடந்த சண்டையின் போது ஜிஹாத் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த 24 பேர் உட்பட காசாவில் 51 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்தது. சண்டையில் குழந்தைகள் உட்பட மொத்தம் 27 காசா பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
“இஸ்ரேல் குடிமக்களுக்கு அவர்கள் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அகற்ற, இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் படைகள் செயல்படும்” என்று இஸ்ரேலிய பிரதமர் யாயர் லாபிட் கூறினார். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ், இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் குடிமக்களைப் பாதுகாப்பதே குறிக்கோள் என்றும், இஸ்ரேல் குடிமக்களுக்கு அச்சுறுத்தல் அல்லது தீங்கு விளைவிக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார்.
இதற்கிடையில், காசா பகுதியில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) இடையே சமீபத்திய விரிவாக்கம் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டத்தை நடத்த உள்ளது.