2-ம் போரில் வீசிய 500 கிலோ வெடி குண்டு கண்டுபிடிப்பு ! 16,000 பேர் வெளியேற்றம்!

Default Image

ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா ,பிரிட்டன் போன்ற நாடுகள் ஜெர்மனியில் ஏராளமான வெடி குண்டுகளை வீசினார்.அவர்கள் வீசி பல குண்டுகள் வெடிக்கலாமல் இன்னும் அங்கு மண்ணில் புதைந்து கிடப்பதாக கூறப்படுகிறது.

Related image

ஜெர்மனி அரசு வெடிக்காத  வெடி குண்டுகளை கண்டுப்பிடித்து அவ்வப்போது  செயலிழக்க செய்து வருகின்றனர்.இந்நிலையில் பிராங்க்பர்ட்  நகரில் புதியதாக ஒரு கட்டிடம் கட்டுவதற்கு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது 500 கிலோ எடை கொண்ட வெடி குண்டு  ஓன்று கடந்த மாதம் கண்டுபிடிக்கப் பட்டது.கண்டுப்பிடிக்கப்பட்ட வெடிகுண்டை நேற்று செயலிழக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த சுற்று வட்டாரத்தில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் பிராங்க்பர்ட்  நகரில் புகழ் பெற்ற  மிருகக்காட்சி சாலையையும் நேற்று மூடப்பட்டது.

Image result for Explosive bomb weighing 500 kg in Germany!

கடந்த ஏப்ரல் மாதம் 250 கிலோ வெடி குண்டு ஓன்று கண்டுபிடிக்கப்பட்டது.அந்த குண்டை செயலிழக்க செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்தது.இதனால் அங்கு அருகில் இருந்த பல கட்டிடங்கள் , வீடுகள் சேதமடைந்தனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்