இந்தோனேசியாவில் 5.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்! 20 பேர் உயிரிழப்பு மற்றும் 300 பேர் காயம்.!

Default Image

இந்தோனேசியாவில் ஏற்பட்ட 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர், 300 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று(திங்கள்கிழமை) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் குறைந்தது 300 பேர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சமூக ஊடகங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில், நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்குவதைக் காணலாம். இந்தோனேசியாவின் இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 44பேர் வரை உயிரிழந்திருக்கலாம் மற்றும் 300 பேர் காயமடைந்துள்ளனர், என்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் உள்ளூர் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

சியாஞ்சூரில் நிலச்சரிவில் சிக்கிய இருவரை மீட்டுள்ளதாகவும் ஆனால் மூன்றாவது நபர் இறந்துவிட்டதாகவும் சியாஞ்சூர் காவல்துறைத் தலைவர் டோனி ஹெர்மவன் தெரிவித்தார், அவர் மேலும் கூறியதாவது, நாங்கள் ஒரு பெண்ணையும் ஒரு குழந்தையையும் உயிருடன் வெளியேற்றினோம், ஆனால் மூன்றாவது நபர் இறந்துவிட்டார் என்று கூறினார்.

இடிந்த சில கட்டிடங்களின் அருகில் வசிப்பவர்களை, கட்டிடங்களுக்கு வெளியே இருக்கும்படி மக்களை நாங்கள் எச்சரித்துள்ளோம், நிலநடுக்கத்தின் பின் அதிர்வுகள் ஏற்படக்கூடும்” என்று இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு நிறுவனத்தின் தலைவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்