453 குழந்தைகள் உட்பட 9,000 பேர் போரில் உயிரிழப்பு-உக்ரைன்
ரஷ்ய படையெடுப்பில் இதுவரை கொல்லப்பட்ட 9,000 பேரில் 453 குழந்தைகள் என உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. நேட்டோவின் தொடர்பு மற்றும் உறுப்பினர் ஆவதில் உக்ரைனின் தரப்பு குறித்து ரஷ்யா, உக்ரைனின் பகுதிகள் மீது ஆக்ரமிப்பு செய்து தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும் உக்ரைனின் மின்கட்டமைப்புகள் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலின் மூலம் பல இடங்கள் மின்சாரமின்றி இருளில் தவித்து வருகின்றன, இந்த நிலையில் ரஷ்யாவின் சில தாக்குதல்களில் உக்ரைனில் 9000 போர் வீரர்கள் மற்றும் அந்நாட்டு மக்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் இதில் 453 குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் தெரிவித்தார்.
இதனை நாங்கள் மன்னிக்க மாட்டோம். ஒவ்வொரு குற்றவாளியும் பொறுப்பாவார்கள், பதில் கூறவேண்டும் என்று அவர் கூறினார், ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட அழிவுக்கு, உக்ரைன் இழப்பீடு கோரிவருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.