Israel vs Palestine: காசாவில் இதுவரை 447 குழந்தைகள் உயிரிழப்பு- ஐ.நா அறிவிப்பு!

447 children killed in Gaza

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 7 நாளாக நடைபெற்று வரும் பயங்கர போரில் காசா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் 447 குழந்தைகள் உயிரிழந்ததாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான குண்டுகளை இஸ்ரேல் மீது வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதன்பின், ஹமாஸ் அமைப்பினர் மீது பதில் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்.

இதனைத்தொடர்ந்து, காசா பகுதியில் தொடர் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கு குழி, சுரங்கபாதைகளை தகர்த்து வருகிறது. இதுபோன்று இஸ்ரேலின் நகரங்களில் புகுந்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் தாக்குதல்!

இந்த தொடர் தாக்குதலில் இதுவரை 1,200 பாலஸ்தீனியர்களும், 1,300 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை முதல் இதுவரை ,268 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சூழலில், 24 மணி நேரத்தில் காசாவில் இருந்து மக்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் கூறியது.

தற்பொழுது, காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் கொடூரமாக கொல்லப்பட்ட மக்கள் பற்றிய விவரத்தை ஐ.நா வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த தாக்குதலில் உயிரிழந்த 1,417 பேரில் 447 குழந்தைகள் மற்றும் 248 பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் பதில் வெட்கக்கேடானது… இஸ்ரேல் கடும் கண்டனம்!

மேலும், வெஸ்ட் பேங்க்கில் நடத்தப்படும் தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியகியுள்ளது .இதற்கிடையில், காசாவில் இருந்து மக்கள் வெளியேற்ற வேண்டும் என்ற உத்தரவில் ஐ.நா.வின் பதில் வெட்கக்கேடானது என இஸ்ரேல் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்