வங்கதேச தீ விபத்து.! சமையல் எரிவாயுவால் 7 மாடிகளுக்கு பரவிய தீ.! 44 பேர் உயிரிழப்பு.!

Bangladesh Dhaka Fire Accident

Bangladesh – வங்கதேச தலைநகர் டாக்கா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

வங்கதேச தலைநகர் டேக்காவில் பெய்லி சாலையில் உள்ள வணிக கட்டிடத்தில் நேற்று இரவு 9.45 மணியளவில் முதல் தளத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உள்ள சமைலயறையில் தீ பற்றியது என அந்நாட்டு செய்தி நிறுவனமான டாக்கா ட்ரிப்யூன் (Dhaka Tribune) செய்தி வெளியிட்டுள்ளது.

Read More – பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர் கடன் வழங்கிய சீனா!

சமையல் எரிவாயு இணைப்பானது கட்டிடத்தில் உள்ள பல்வேறு தளங்களில் இணைக்கப்பட்டு இருந்ததால் அதன் மூலம் தீயானது மளமளவென முழு கட்டடம் முழுவதும் பரவியது. தீ பற்றிய உடன் படிக்கட்டுகள் முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டதால் மக்கள் வெளியேற முடியாமல் தவித்துள்ளனர். பலர் கட்டிடத்தின் மேல் இருந்து குதித்தும் உள்ளனர்.

Read More – Russia : ராணுவத்தில் வேலை ..2லட்சம் சம்பளம் ..இந்தியர்களை ஏமாற்றி கொலை செய்யும் ரஷ்ய ராணுவம் ..?

தீ விபத்து தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் தீ அணைத்து, மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.  தகவல் அறிந்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் சமந்தா லால் சென், டாக்கா பகுதி சட்டமன்ற உறுப்பினர் AFM பஹாவுதீன் நசிம் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

Read MORE – அதிபர் வேட்பாளர் தேர்தல்: மிச்சிகனில் ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் வெற்றி..!

அதிகாலை 2 மணிக்கு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சென், டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 33 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.அடுத்ததாக மற்றொரு மருத்துவமனையில் கூடுதலாக 10 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். பின்னர் மத்திய போலீஸ் மருத்துவமனையில் மற்றொருவர் உயிரிழந்தார். இதனை அடுத்து மொத்தம் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏழு அடுக்கு கிரீன் கோஸி கட்டிடத்தில் இருந்து இருந்து உயிரிழந்த 44 பேர் உட்பட 70 நபர்களை மீட்பு படையினர் மீட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்