எந்த ஊரு பாடகிமா நீ..! டிக்கெட்டே எடுக்காமல் மலை மீது குவிந்த 40 ஆயிரம் ரசிகர்கள்..!
ஜெர்மனி : ஜெர்மனியில் நடைபெற்ற பிரபல பாடகி ‘டெய்லர் ஸ்விஃப்ட்’ இசை நிகழ்ச்சியைக் காண்பதற்காக மைதானத்திற்கு அருகே இருந்த மலை மீது ஏரளமான ரசிகர்கள் குவிந்தனர். இவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனியில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இதனால், கூட்டம் கடலென திரண்டதால் வரலாறு காணாத புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
பிரபல அமெரிக்க பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட், பல்வேறு இசை விருதுகளை வென்று, உலக அளவில் மிகுந்த புகழ் கொண்டவர். இவர் அவ்வப்போது இசை நிகழ்ச்சி நடத்துவது உண்டு. அந்த வகையில், ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் செவ்வாய் (ஜூலை 23) மற்றும் புதன் (ஜூலை 24) ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளை நடத்தினார். அதன், பின்பு 27, மற்றும் 28 ம் தேதி முனிச்சில் உள்ள ஒலிம்பியா ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில், ஸ்டேடியத்திற்கு உள்ளே டிக்கெட் வாங்கி கொண்டு அனுமதியோடு சுமார் 30,000 கச்சேரியை மேற்பட்டோர் கண்டு களித்தனர். ஆனால், அரங்கத்தைச் சுற்றியும் அருகிலுள்ள பகுதிகளிலும் கூடியிருந்த ரசிகர்களின் பெரும் கூட்டத்தை ஈர்த்தது.
Taylor Swift broke the all-time record for most attended female concert ever in Munich, with nearly 74,000 attendees. ????
Then broke it again today, with over 120,000 people at her show in the German city! ✨????????
Thousands of Taylor Swift fans got free seats to her concerts in… pic.twitter.com/DmztgvIT4Y
— Nosy Buzzer (@NosyBuzzer) July 28, 2024
ரசிகர்கள் டிக்கெட் இல்லாமல் கூட ஸ்டேடியத்திற்கு வெளியே முகாமிட தொடங்கினர். ஒலிம்பியா ஸ்டேடியத்தின் அருகே இருந்த ஒரு முழு மலையும் மறையும் படிம, டெய்லர் ஸ்விஃப்ட் ரசிகர்கள் கூட்டம் கூடியது. டிபிஏ செய்தி நிறுவனம் கூறியபடி, அந்த மலையில் சுமார் 40,000 பேர் கூடினர் என்று போலீசார் மதிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்பங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
????| Taylor Swift acknowledging the insane crowd of people on the hill outside the stadium at today’s show in Munich, Germany! #MunichTSTheErasTour
“We have people in a park outside the stadium, thousands of people listening from out there!” pic.twitter.com/s8LZxYrsxA
— The Eras Tour (@tswifterastour) July 27, 2024