133 பேரை பலிகொண்ட மாஸ்கோ தாக்குதல்… ஒப்புக்கொண்ட குற்றவாளிகள்.?

Moscow Terror Attack

Moscow Attack : மாஸ்கோ தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரின் புறநகர் பகுதியில் கடந்த 21ஆம் தேதி இரவு நேரத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் சுமார் 5ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது அங்கு புகுந்த மர்ம கும்பல் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சுமார் 133 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கொடூர தாக்குதலை நடத்தியதற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என அனைவரையும் பிடிப்பதற்கு ரஷ்ய பாதுகாப்புத்துறை தீவிரம் காட்டியது. இந்நிலையில் இந்த கொடூர சமபவத்தில் ஈடுபட்ட 4 பேரை முதற்கட்டமாக ரஷ்ய பாதுகாப்புத்துறை கைது செய்துள்ளது. மேலும் 10 பேர் விசாரணை வளையத்தில் பாதுகாப்புத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

கைது செய்யப்பட்ட 32 வயதான டேலர்ட்ஜோன் மிர்சோயேவ், 30 வயதான சைதாக்ரமி ரச்சபலிசோடா, 19 வயதான முகமதுசோபிர் ஃபைசோவ், 25 வயதான ஷம்சுதீன் ஃபரிதுன் ஆகியோர் இன்று ரஷ்ய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் . அதில் , டேலர்ட்ஜோன் மிர்சோயேவ், சைதாக்ரமி ரச்சபலிசோடா ஆகியோர் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முகமதுசோபிர் ஃபைசோவ் விசாரணையின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் சர்க்கர நாற்காலியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். குற்றம் தொடர்பாக கைது செய்யப்ட்டவர்களிடம் கடுமையான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என கூறபடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்