படகு கவிழ்ந்து விபத்து: பிறந்த குழந்தை உடட்பட 37 பேர் மாயம்.!
இத்தாலியின் லம்பெடுசா தீவில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்ததில் 37 பேர் காணாமல் போயுள்ளதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.
துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட கப்பல், கேமரூன், புர்கினா பாசோ மற்றும் ஐவரி கோஸ்ட்டில் இருந்து 46 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு இத்தாலி அருகே பலத்த காற்று மற்றும் அதிக அலைகளில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 37 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களில் ஏழு பெண்களும் ஒரு பிறந்த குழந்தையும் அடங்கும். இந்த விபத்தில் உயிர் பிழைத்த நான்கு பேர் லம்பேடு என்ற பகுதி கரையை அடைந்து விபத்து குறித்து தகவல் அளித்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
சமீப காலமாக புலம்பெயர்ந்த படகு விபத்துக்கள் அதிகரித்துள்ளன என்றும், அதே நேரத்தில் மத்திய மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 2023 இல் இருமடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது என்று ஐரோப்பிய எல்லை நிறுவனமான ஃபிரான்டெக்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் லிபியாவில் இருந்து இழுவை படகு ஒன்று கிரேக்க கடற்கரையில் மூழ்கியது. இதில, இறந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக உள்ளது.