துருக்கி நிலநடுக்கத்தால் ரூ. 2,81,185 கோடி சேதம்..! உலக வங்கி மதிப்பீடு..!

Default Image

துருக்கி நிலநடுக்கத்தால் 34.2 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 6 அன்று, துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 34.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 2,81,185 கோடி ரூபாய்) சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

துருக்கி நிலநடுக்கம் :

பிப்ரவரி 6 அன்று துருக்கி மற்றும் சிரியாவில் 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மிகப்பெரிய தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியானதோடு பல கோடி மதிப்பிலான அரசாங்க மற்றும் தனியார் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இந்த இடிபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ தாண்டியது.

turkey45d
Turkey Earthquake [Image Source : Twitter]
உலக வங்கி மதிப்பீடு :

தற்பொழுது துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 34.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 2,81,185 கோடி ரூபாய்) சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இதனை சீரமைக்க 2 மடங்கு கூடுதலாக செலவாகும் என கணித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை 2023 இல் 3.5% முதல் 4% வரை குறைக்கும் என்று வங்கி மதிப்பிட்டுள்ளது என்று துருக்கிக்கான உலக வங்கியின் இயக்குநர் ஹம்பர்டோ லோபஸ் கூறியுள்ளார்.

World Bank
[Representative Image]
சிரியாவின் சேத மதிப்பீடு :

பின்னர் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியாவின் நிலைமை உண்மையிலேயே கவலை அளிப்பதாக உலக வங்கி குழுமம் மற்றும் மத்திய ஆசியாவின் துணைத் தலைவர் அன்னா பிஜெர்டே கூறினார். சிரியாவிற்கான தனி சேத மதிப்பீட்டை விரைவில் வங்கி வெளிவிடும் என்று அவர் மேலும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Kerala Govt Pongal holidays
Sanjay Bangar Sanju Samson
pongal (1) (1)
jallikattu price
JammuKashmir
rain heavy