அமெரிக்காவில் கடுமையான பனிப்புயலால் 34 பேர் பலி.!
அமெரிக்காவில் ஏற்பட்டுவரும் பனிப்புயலால் குறைந்தது 34 பேர் பலியாகியுள்ளனர், மேலும் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு வருவது வழக்கம், ஆனால் தற்போது அங்கு கடுமையான பனிப்புயல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு ஏற்பட்டுள்ள கடுமையான குளிர்கால பனிப்புயலால் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பனிப்புயலால் வெளியில் வரமுடியாமல் பலர் தங்கள் வீடுகளுக்குள் சிக்கியிருப்பதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 60% பேர் குளிர்காலங்களில் ஏற்படும் வானிலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அரசு அறிவுரையின் கீழ் இருந்து வருகின்றனர்.
மேலும் இந்த பனிப்புயலால் கிட்டத்தட்ட 1,707 உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.