இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 31 பத்திரிகையாளர்கள் பலி…9 பேர் மாயம்!

journalists

இஸ்ரேல் – ஹமாஸ் போர் கடந்த 7ஆம் தேதி தொடங்கி 3 வாரங்களை கடந்து இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதனிடையே இருதரப்பும் போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் தற்போது வரை இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் 31 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 26 பாலஸ்தீனியர்கள், 4 இஸ்ரேலியர்கள் மற்றும் 1 லெபனான் ஊடகவியலாளர்கள் உள்ளனர் என்பதை பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு (CPJ) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த 31 பத்திரிகையாளர்களில், 26 பேர் காஸாவில் கொல்லப்பட்டனர், அதேசமயம், அவர்களில் நான்கு பேர் அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் போது கொல்லப்பட்டனர் என்றும், லெபனானில் ஒரு பத்திரிகையாளர் ஹெஸ்பொல்லா அமைப்பை குறிவைத்த இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மக்களை பாதுகாக்க தவறிய நெதன்யாகு! ஹமாஸ் பிடியில் ஊள்ள 3 பெண் ப

மேலும்,  8 ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும், 9 பேர் காணவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை அவர்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஹமாஸின் இராணுவத் திறன்களை அழிப்பதில் தெளிவான இலக்கை நிர்ணயித்துள்ளோம்.! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

கள நிலவரத்தை ஆராய இஸ்ரேலுக்குள் இதுவரை அதிக எண்ணிக்கையிலான பத்திரிகையாளர்கள் நுழைந்துள்ளனர். அமெரிக்கா (358), இங்கிலாந்து (281), பிரான்ஸ் (221), ஜெர்மனி (102) ஆகிய நாடுகளில் இருந்து சென்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில், அவர்களுக்கு தாக்குதலுக்கு மத்தியில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ முடியாது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்