ஆப்கானிஸ்தானில்திடீர் வெள்ளப்பெருக்கு.. 300 பேர் உயிரிழப்பு.!
Afghanistan Flooding : ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி உயிரிழந்தோரின் 300 ஆக உயர்ந்துள்ளது.
வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருவதன் காரணமாக பாக்லான் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பெய்த அதீத கனமழையால் காபூல், பஹ்லான் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இன்னும் பலரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், காயமடைந்தவர்களை மீட்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கான அவசர நிலையை ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் அறிவித்தது.
அதன்படி, பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் நிவாரணப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாக்லான் மாகாணத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.