சூடானில் வெள்ளப்பெருக்கால் அணை உடைந்து விபத்து – 30 பேர் உயிரிழந்த சோகம்!
சூடான் : கிழக்கு சூடானில் அணை இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.
குடியரசு ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள கிழக்கு சூடானில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அணை ஒன்று உடைந்து விபத்துக்குள்ளானது. உடைந்த அணையில் இருந்து வெளியேறிய நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் 30 பேர் உயிரிழந்தனர்என்று ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால நிவாரண நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த சம்பம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூடானின் வடமேற்கு செங்கடல் மாநிலத்தில் அமைத்துள்ள அந்த அணை தென்கிழக்கில் சுமார் 38 கிலோமீட்டர்கள் (23 மைல்கள்) தொலைவில் உள்ள அந்நாட்டின் ஐந்தாவது பெரிய நகரமான போர்ட் சூடானுக்கு தண்ணீரை வசதியை வழங்கி வந்துள்ளது.
மேலும், பலரைக் காணவில்லை என மக்கள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையால் போர்ட் சூடானில் இருந்து வடக்கே 40 கிமீ (25 மைல்) தொலைவில் உள்ள அர்பாத் அணை இடிந்து விழுந்ததில் 20 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
மேலும் 50 கிராமங்கள் சேதமடைந்தன என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. சுமார், 50,000 பேரின் வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என தகவல் தெரிவிக்கின்றனர்.