காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்.! 30 பேர் உயிரிழப்பு, 100 பேர் காயம்.!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் காசா பகுதியில் இடைவிடாத வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தி வருகிறது. இதனால் இரண்டு பக்கங்களிலும் இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும், பெரும்பாலும் காசா பகுதியில் இருக்கும் பாலஸ்தீனியர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, இஸ்ரேல் மக்கள் 1,400 பேர் உயிரிழந்ததாகவும். காசா நகரில் 6,150 குழந்தைகள் மற்றும் 4,000 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் போர் நிறுத்தம் குறித்து இந்தியா உட்பட பல உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
சீனாவில் அதிகரிக்கும் காய்ச்சல்.. புதிய வைரஸ் கண்டறியப்படவில்லை.! WHO-விடம் சுகாதாரத்துறை தகவல்.!
ஆனால், ஹமாஸ் அமைப்பு முற்றிலும் அழியும் வரையில் போர் நிறுத்தம் இல்லை என் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளிப்படையாக அறிவித்தார். ஏனெனில் ஹமாஸ் அமைப்பினர் போர் தொடங்கியபோது இஸ்ரேலை சேர்ந்த 200 க்கும் மேற்படூரை பணயக்கைதிகளாக சிறைபிடித்தது. அவர்களை இன்னும் விடுவிக்காமல் இருந்து வருகிறது.
இதனால் ஹமாஸ் அமைப்பினர் சிறைபிடித்து வைத்துள்ள பணயக்கைதிகளை விடுவிக்க, இஸ்ரேல் போர் இடைநிறுத்தம் செய்யுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், ஹமாஸிடம் பணயக்கைதிகளாக உள்ள 50 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்க, 4 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் வீடு சுத்தமாகவும், பாத்திரம் கழுவாமல் இருந்தால் அபராதம் ..!
ஆனால் இப்போது வடக்கு காசா பகுதியில் உள்ள ஐ.நா.வால் நடத்தப்படும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர் என்று பாலஸ்தீனிய குழு ஹமாஸ் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஜபாலியா அகதிகள் முகாமில் உள்ள ஐ.நா. நிவாரண மற்றும் வேலை முகமையால் (UNRWA) நடத்தப்படும் அபு ஹுசைன் பள்ளியின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், ஹமாஸ் பயங்கரவாதிகள் காசாவிற்கு வெளியே எங்கிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மொசாட் உளவு அமைப்பிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.