சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹேஸ் நகரில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் நேற்று இரவு அங்குள்ள பாழுங்கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.இதனை பார்த்த பெற்றோர் அச்சத்தில் சத்தம்போட்டுள்ளனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்துள்ளனர்.பின்னர் சிறுவன் விழுந்த கிணறு 4 மீட்டர் ஆழத்தில் குறுகலாக இருந்ததால் அக்கம்பக்கத்தினரால் சிறுவனை மீட்க முடியவில்லை.
பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் படி விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் அரை மயக்கத்துடன் இருந்த சிறுவனுக்கு உடனடியாக ஆக்சிஜன் சப்ளை அளித்துள்ளனர்.
பின்னர் சிறுவனின் கையை கட்டி மேலே இழுக்க முயற்சி செய்துள்ளனர் .ஆனால் கிணற்றின் உள்பகுதி மிகவும் குறுகலாக இருந்ததால் சிறுவனை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் சிறுவன் இருந்த கிணற்றுக்கு அருகில் புதிதாக குழி ஒன்றை தோண்டி அங்கிருந்து சுரங்கப்பாதை அமைத்து பலமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சிறுவனை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…