கழுத்து அறுக்கப்பட்டு புதைக்கப்பட்ட 3 பெண்கள்..! வெளியாகிய கடைசி குறுஞ்செய்தி..!

Default Image

ஈக்வடாரில் கடற்கரைப் பயணத்தின் போது கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பெண்கள் குழு அனுப்பிய குறுஞ்செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈக்வடாரின் குயின்ண்டே அருகே கடற்கரைப் பயணத்தின் போது கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி டெனிஸ் ரெய்னா, யூலியானா மசியாஸ் மற்றும் நயேலி டாபியா என்ற 3 பெண்கள் காணாமல் போயுள்ளனர். இதையடுத்து குயின்ண்டே அருகே எஸ்மரால்டாஸ் ஆற்றங்கரையில் ஒரு நாய் தரையில் மோப்பம் பிடித்ததை மீனவர்கள் குழு ஒன்று கண்டறிந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தது

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வாயை மூடி, கழுத்து அறுக்கப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் 3 பெண்களின் உடல்களையும் கண்டெடுத்தனர். அதில், மசியாஸ் என்பவர் ஒரு பாடகர் மற்றும் ரெய்னா ஒரு விவசாய பொறியியல் மாணவி ஆவார்.

கடல் மணலில் புதைக்கப்பட்ட 3 பெண்களின் உடல்களும் அழுகிய நிலையில் இல்லாமல் இளமையாக இருந்ததாகவும் அப்பகுதி முழுவதும் சோதனை செய்து ஒரு மொபைல் போனை மீட்டெடுத்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். ரெய்னா காணாமல் போவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அவர் ஒரு நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

அதில், எனக்கு ஏதோ நடக்கப் போகிறது என்று நான் உணர்கிறேன். அப்படி ஏதாவது நடந்தால், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள், என்று எழுதியிருந்தது. மேலும், கொலையாளிகளை போலீசார் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்