Arkansas [File Image]
அமெரிக்கா : ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்டைஸில் உள்ள மளிகைக் கடைக்கு வெளியே வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இரண்டு சட்ட அமலாக்க அதிகாரிகள் எனவும் தெரிய வந்துள்ளது.
மருத்துவமனையில் உள்ள அவர்களின் நிலைமைகள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று செய்தியாளர் சந்தித்த போலீசார் தகவலை தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், ஆர்கன்சாஸ், நியூ எடின்பர்க் பகுதியைச் சேர்ந்த 44 வயதான டிராவிஸ் யூஜின் போஸி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதிகாரிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மூன்று கொலை வழக்குகளில் மாநில போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூடு மளிகைக் கடைக்குள் நடந்ததா அல்லது வெளியில் நடந்ததா என்பதை போலீஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. போஸியின் துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னணியில் உள்ள நோக்கத்தையும் பற்றி திவீரமாகி விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து ஆர்கன்சாஸ் மாநில காவல்துறை இயக்குனர் மைக் ஹாகர் கூறுகையில் “துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடந்து மூன்று பேர் இறந்துவிட்டனர் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும். துப்பாக்கிச் சூடு சண்டையில் இரண்டு சட்ட அமலாக்க அதிகாரிகள் காயமடைந்தனர். சந்தேக நபரும் சுடப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்” என தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…
டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…