ஆப்கானிஸ்தானில் விபத்து.! 3 பேர் உயிரிழப்பு.! 13 பேர் காயம்.!
ஆப்கானிஸ்தான் நாட்டில் காந்தஹார் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில், காந்தஹார் மாகாணத்தில் நேற்று இரவு 7.30 மணி அளவில் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அந்த பகுதியில் சாலை மிக மோசமாக இருப்பதாலும், கவன குறைவாக பலர் வாகனங்களை இயக்குவதாலும் இது போன்ற விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் உள்ளூர்வாசிகள் கூறி வருகின்றனர்.