ரஷ்யா: ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் அருகே உள்ள ஆற்றில் 4 இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக அங்குள்ள அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (இன்று) தெரிவித்துள்ளனர். அதில் ஒரு பெண்ணமணியை மட்டுமே மீட்டுள்ளதாகவும் மீதம் உள்ள மூவரையும் தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 18-20 வயதுடைய 4 மாணவர்கள் – 2 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகள் அருகிலுள்ள வெலிகி நோவ்கோரோட் நகரில் உள்ள நோவ்கோரோட் மாநில பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பின்னில் என்ன காரணம் என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேலும், ஆற்றிலிருந்து மீட்ட அந்த பெண்ணும் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் மீதம் உள்ள 3 மாணவர்கள் இறந்துள்ளதாகவும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் ஜல்கான் மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் பிரசாத் உறுதிப்படுத்தி இருக்கிறார். இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடல்களை விரைவில் உறவினர்களுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளோம். காப்பாற்றப்பட்ட மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களை தொடர்பு கொண்டு சாத்தியமான அனைத்து உதவிகளுக்கும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், காப்பாற்றப்பட்ட மாணவிக்கு உளவியல் ரீதியான சிகிச்சையையும், முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் நீரில் மூழ்கியதற்கான காரணம் அல்லது பலியானவர்களின் அடையாளம் குறித்த விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை”, எனவும் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…