ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 3 பேர் பலி, 44 பேர் காயம்.!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் பகுதியில் ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், மூன்று பேர் உயிரிழந்ததாக தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தானின் பொது சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 44 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போக, இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக, மார்ச் 18ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகருக்கு கிழக்கே 213 கிமீ தொலைவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், துர்க்மெனிஸ்தான், இந்தியா, கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிளும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.